காதல் ஜோடி தங்கியிருந்த அறைக்குள் புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய ரூம் பாய்..!
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே பண்ணை வீட்டில் காதல் ஜோடி தங்கியிருந்த அறைக்குள் புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய ரூம் பாயை உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற இளைஞர், பரமன்கேனியில் உள்ள பண்ணை வீட்டில் தனது காதலி மற்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் 3 அறை எடுத்து தங்கியுள்ளார்.
அங்கு ரூம் பாயாக பணிபுரியும் சுபாஷ் என்பவன், வெள்ளிக்கிழமை இரவு ராமச்சந்திரனும் அவரது காதலியும் தூங்கிக் கொண்டிருந்த போது, அறைக்குள் புகுந்து, பெண்ணிடம் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது.
பெண் கூச்சலிட்டதும் கண் விழித்த ராமச்சந்திரனும், அவரது உறவினர்களும், சுபாஷை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சுபாஷின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில், பண்ணை வீட்டிற்கு வந்து தங்கும் பல பெண்கள் குளிக்கும் போதும், உடைகள் மாற்றும் போதும் வீடியோ எடுத்து வைத்திருந்தது அம்பலமானது.
Comments