ஜி20 நாடுகளின் மாநாடு ஸ்ரீநகரில் நாளை ஆரம்பம்... ஸ்ரீநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை..!
ஜி20 நாடுகளின் மாநாடு, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாளை தொடங்கவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதன் 3வது சுற்றுலா பணிக்குழு கூட்டம், நாளை தொடங்கி, வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனையொட்டி, ஸ்ரீநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும், ராணுவத்தினர் தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு நடைபெறும் முதல் சர்வதேச மாநாடு என்பதால், எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில், இந்திய கடற்படையின் நவீன பாதுகாப்புப் படையான மார்கோஸ் வீரர்களும்,
தேசிய பாதுகாப்புப்படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜம்முவின் செனப் ஆற்றிலும், எல்லைப்பாதுகாப்புப்படையினர் 24 மணி நேரமும் ரோந்துப்பணியை மேற்கொண்டுள்ளனர்.
Comments