''உக்ரைன் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்காணப்பட வேண்டும்..'' ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்..!
உக்ரைன் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜிய ரீதியிலேயே தீர்வுக்காணப்பட வேண்டும் என்றும், ஐநா மற்றும் சர்வதேச சட்டங்களை உலக நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்றும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஹிரோஷிமாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், பிற நாடுகளின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டை மற்ற நாடுகள் மதிக்க வேண்டுமென்றார்.
முன்னதாக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், பிரதமர் மோடியும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது வர்த்தகம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே, 2ம் உலக போரின்போது ஹிரோசிமாவில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமைதிப் பூங்காவில் பிரதமர் மோடி மற்றும் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர், பப்புவா நியூ கினியாவிற்கு சென்றார்.
Comments