'மிக் 21' ரக போர் விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தியது இந்திய விமானப்படை..!
ராஜஸ்தானில் நேரிட்ட விபத்து எதிரொலியாக, 'மிக் 21' ரக போர் விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்திலிருந்து கடந்த 8-ந் தேதி வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்ட 'மிக் 21' ரக விமானம், ஹனுமன்கர் நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்திய விமானப் படையில் 1960-களில் இணைக்கப்பட்டதில் இருந்து, கடந்த 60 ஆண்டுகளில், இந்த விமானம் தொடர்பாக 400 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
இதையடுத்து தற்காலிகமாக சுமார் 50 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உரிய பரிசோதனைகள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைக்கு பிறகு மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்-21 ரக விமானங்கள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் படிப்படியாக அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments