"அ.தி.மு.க ஆட்சியில் அமைத்த மின்பாதையால் தற்போது மின்விநியோகம் அதிகரிப்பு.." - பி. தங்கமணி..!

0 1681

தமிழகத்தில் தற்போது 19,387 மெகாவாட் மின்சாரம் வினியோகிக்கப்படுவதற்கு அதிமுக ஆட்சியில் மின்பாதை அமைத்ததே காரணம் என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி கூறினார்.

நாமக்கல்லில் பேட்டியளித்த அவர், அதிமுக அரசு அமைத்த 13 துணை மின் நிலையங்களை திமுக அரசு துவக்கி வைத்துள்ளது என்றார்.

கடந்த மாதம் நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் செந்தில்குமார், தலைவர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை நடத்தியதாக கூறிய தங்கமணி, தலித் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதால் தலைவர் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

ஜேடர்பாளையத்தில் நடைபெற்று வரும் பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவும் தங்கமணி வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments