காதல் திருமணம் செய்துகொண்ட காவல் ஜோடி... எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர்... பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்..!

0 5686

தென்காசியில் காதல் திருமணம் செய்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

ஆவுடையானூரைச் சேர்ந்த குத்தாலிங்கம், கமுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

அச்சம்பட்டியைச் சேர்ந்த வடிவம்மாள், நாகர்கோயில் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

இருவரும் ஒரே பேட்சில் பயிற்சி முடித்து 6 மாதங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளனர். பயிற்சிக் காலத்தில் இருவரும் காதல் வயப்பட்ட நிலையில், வேறு வேறு சமூகத்தினர் என்பதால் இரு குடும்பங்களிலுமே எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனையடுத்து ரகசிய திருமணம் செய்துகொண்ட அவர்கள் பாதுகாப்பு கேட்டு தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments