ரயில்வே விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் உருவான நீரூற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழப்பு...!
தேனியில் செயற்கையாக உருவான நீரூற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். ஏழாம் வகுப்பு படித்து வந்த சிவ சாந்தன், வீரராகவன் நேற்று மாலை வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றனர்.
அவர்கள், இரவு வரை வீடு திரும்பாததால், சிறுவர்களை தேடிய பெற்றோர், தேனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தேனி ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள நீரூற்றுப் பகுதியில் இரு சைக்கிள்கள் நிற்பதாக காவல் துறைக்கு தகவல் தெரியவே, அங்கு சென்ற போலீசார் ரயில்வே விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஏற்பட்ட செயற்கை நீரூற்றுப் பகுதியில் சிறுவர்களின் சைக்கிள்கள் மற்றும் செருப்புகள் இருப்பதை கண்டனர்.
தீயணைப்பு துறையினரின் 15 மணி நேர தேடுதலுக்கு பின்னர், நீருற்றின் சேற்று பகுதியிலிருந்து சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த நீரூற்றில் உள்ள சேற்றுப் பகுதியில் சிக்கி இதுவரை இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Comments