பாம் வச்சிருந்தா.. பாலைய்யா ஆயிர முடியுமா..? கும்மிய போலீஸ்...!

0 2116
பாம் வச்சிருந்தா.. பாலைய்யா ஆயிர முடியுமா..? கும்மிய போலீஸ்...!

உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வங்கிக்குள் புகுந்து இரண்டு லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த டம்மி கொள்ளளையனை மடக்கிப்பிடித்த மக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.

தெலுங்கு சினிமா ஒன்றில் துப்பாக்கி தோட்டாவை வாயல் துப்பி டைம் பாம்மை நிறுத்தும் 'காட் ஆப் மாஸ்' பாலையாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இளைஞர் ஒருவர் வங்கிக்குள் வெடிகுண்டுடன் புகுந்து அதகளம் செய்துள்ளார்

தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் ஜி டி மெட்லா நகரில் ஆதர்ஷ் வங்கி என்ற கூட்டுறவு வங்கி உள்ளது.

சம்பவத்தன்று மதியத்திற்கு மேல் வங்கிக்குள் புகுந்த நபர் ஒருவர் சினிமாவில் காண்பிக்கப்படுவது போன்ற போலி வெடிகுண்டு ஒன்றை உடலில் கட்டிக் கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

தனக்கு உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் பணம் தேவை... கொடுக்க தவறினால் டைம்பாம்பை வெடிக்க செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பாலையாவின் பல படங்களில் பார்த்த டம்மி வெடிகுண்டு போல இருந்ததால் உஷாரான வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மிரட்டிய நபரை மடக்கி பிடித்து ரவுண்டு கட்டினர்

அவரை ரெண்டு தட்டு தட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்

விசாரணையில் ஜீடிமெட்டிலா பகுதியை சேர்ந்த சிவாஜி என்ற அந்த நபர் பல்வேறு நிறுவனங்களில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து விட்டு தற்போது பார்வை கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறினார். சுலபமாக பணம் சம்பாதிக்க முடிவு செய்து வாங்கியில் புகுந்து டம்மி வெடிகுண்டுடன் சென்று மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

அந்த நபரை கைது செய்துள்ள போலீசார் அவரை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments