தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கல்வி நிறுவனங்கள் துவங்கலாம்.? குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு..!
தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கல்வி நிறுவனங்களை துவங்கலாம் என எந்த விதியும் இல்லாததால், அதுகுறித்து பரிந்துரைகளை வழங்க குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த குரும்பபாளையம் கிராமத்தில் 1990ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இரு வார்ப்பாலைகள் அருகே கடந்த 2011ஆண்டு தனியார் பள்ளி ஒன்று துவங்கப்பட்டது.
ஆலைகளால் மாசு ஏற்படுவதாகவும் அவற்றை மூட வேண்டும் என்றும் கோரி, பள்ளி நிர்வாகம் சார்பில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஆலைகளுக்கு அருகே பள்ளியைத் துவங்கிவிட்டு, மாசு ஏற்படுத்துவதாக கூறி, ஆலைகளை மூட உத்தரவிடும்படி கோர முடியாது எனத் தெரிவித்தது.
குழு வழங்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து ஆறு மாதங்களில் உரிய அறிவுறுத்தல்களை பிறப்பிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Comments