ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஹிரோஷிமா சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஜப்பானிய உயர்தொழில்நுட்பம், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வது குறித்து அப்போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தென்கொரிய அதிபர் யூன் சுக் யூலையும், வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின்னையும் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பரஸ்பர வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் காந்திய கொள்கைகள் உலகளவில் கோடிக்கணக்கானோருக்கு வலிமையை தருவதாக பிரதமர் மோடி கூறினார்.
Comments