முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமாரும் இன்று பதவியேற்பு

0 2026

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார்.

பெங்களூரு கண்டீவரா மைதானத்தில் பிற்பகல் 12:30 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சித்தராமையாவுடன் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமாரும், அமைச்சர்கள் சிலரும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சியைக் காண ஒரு லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பெங்களூருவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments