ஒரு பீர் 300 ரூபாயா ? கும்மாங்கோ.. கும்மாங்கோ.. 'கொக்கரக்கோ' கும்மாங்கோ..! திமுக மதுப்பிரியர் வேதனை

0 6236

பல்லடத்தில் உள்ள கொக்கரக்கோ உணவகத்தில்  ஒரு பீர் 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மிகுந்த வேதனையோடு திமுக மாணவரணி நிர்வாகி ஒருவர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு வேதனையுடன் அனுப்பிய ஆடியோ வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அருகே இருக்கும் கொக்கரக்கோ என்ற மது பாருடன் கூடிய உணவு விடுதி உள்ளது.

சாமி நாதன் என்பவருக்கு சொந்தமான இந்த மதுபாரில் , ஒரு பீர் 300 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், தட்டிக்கேட்டால் எல்லா மட்டத்திலயும் பணம் கொடுப்பதாகவும் கூறி தன்னை மிரட்டியதாக புகார் தெரிவித்து பல்லடம் மாணவர் அணி திமுக அமைப்பாளர் ராஜ் என்பவர் ஆதங்கத்துடன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆடியோ ஒன்றை பதிட்டு பொது வெளியில் அனுப்பி உள்ளார்

 

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள கொக்கரக்கோ சாமி நாதன் , தாங்கள் முறையாக உரிமம் பெற்று கோவையில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து விற்பதாகவும் , இவ்வளவு விலைக்குத்தான் விற்க வேண்டும் என்று தங்களிடம் யாரும் கூறவில்லை என்றார். மேலும் எந்த ஒரு கட்சியினருக்கும், போலீசுக்கும் பணம் கொடுப்பதில்லை என்றும் கூறினார்

 

டாஸ்மாக் கடையில தான் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் என்றால் , அரசு அனுமதியுடன் தனியார் நடத்தும் இது போன்ற உணவகங்களுடன் கூடிய பாரில் இரு மடங்கு விலை வைத்து மதுப்பாட்டில்கள் விற்கப்படுவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments