வேலை நேரத்தில் சேலை வாங்கிய ஊழியர்கள்... கவுன்ட்டர்களில் ஊழியர்கள் இல்லாததால் வெகுநேரம் காத்திருந்த பொதுமக்கள்..!
வரி செலுத்த வந்த பலர் வரிசையில் காத்திருந்த நேரத்தில் வியாபாரி கொண்டு வந்த சேலையை மாநகராட்சி ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கரூர் மாநகராட்சி வரி வசூல் கவுன்ட்டர்களில் இருக்கும் 3 பெண் ஊழியர்களும், ஒரு ஆண் ஊழியரும் சேலை வியாபாரியிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் காத்திருக்க நேரிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் ஊழியர்களை அழைத்து வரியை செலுத்திவிட்டு சென்றனர்.
மாநகராட்சி ஊழியர்கள் வீதி வீதியாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும், வீடு வீடாக சென்று வரி கட்டுமாறு அறிவுறுத்தியும் வரும் நிலையில், வரி கட்டுவதற்காக வந்தவர்களை ஊழியர்கள் காத்திருக்க வைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Comments