ரூ. 2000 நோட்டை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு

0 7353
ரூ. 2000 நோட்டை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு

2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்களின் கையிருப்பில் உள்ள 2000 ரூபாய் தாள்களை வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு ஒருவரால் 20 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள முடியும் என  தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2 ஆயிரம் நோட்டுகள் விநியோகித்தை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

2017-ம் ஆண்டுக்கு முன்பாக வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் தாள்களின் ஆயுள் 4 முதல் 5 ஆண்டுகள் தான் என்பதால், கிளீன் நோட் பாலிஸி அடிப்படையில் இந்த தாள்களை திரும்பப் பெறுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவாக அறிவித்துள்ள போதிலும், அந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. எனவே பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று பொருளாதார நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments