தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

0 2522
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

புதுச்சேரி வில்லியனூர் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநரான மணிகண்டனின் இளைய மகன் ஜஷ்வந்த், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானான். வெகுநேரம் தேடியும் மகன் கிடைக்காததால், வில்லியனூர் காவல் நிலையத்தில் தந்தை மணிகண்டன் புகார் அளித்தார்.

புகாரையடுதது சிறுவன் ஜஷ்வந்தை தேடிய போலீசார், அவனது வீட்டின் அருகே, உறவினர் ஒருவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் தரை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவன் இறந்து கிடப்பதை கண்டனர். சிறுவன் ஜஷ்வந்த் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியின் மேலே போடப்பட்டிருந்த மரப்பலகை முறிந்து உள்ளே இறந்திருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments