''நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சுப் போட்டு மல்லாக்கப் படுப்போம்''... வாய் நீண்டதால்.. வழுக்கி விழுந்தார்

0 2580
''நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சுப் போட்டு மல்லாக்கப் படுப்போம்''... வாய் நீண்டதால்.. வழுக்கி விழுந்தார்

செங்கல்பட்டு அருகே மித மிஞ்சிய மது போதையில் காவல் நிலையத்திற்கே சென்று காவல்துறை ஆய்வாளரின் முன் சக காவலர்களை தகாத வார்த்தைகளில் பேசி அலப்பறை செய்த குடிமகன் வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டது.

மது போதையில், காவல் நிலையத்துக்குள் புகுந்து கால் மேல் கால் போட்டு தவுளத்தாக அமர்ந்து பெண் போலீசிடம் வாய்சவடால் விடும் இவர், வேப்பஞ்சேரியை சேர்ந்த அரை டவுசர் நாகராஜ்..!

போலீசாரின் வாகன சோதனையின் போது, மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த நாகராஜை மடக்கிய போலீசார் மொபட்டை பறிமுதல் செய்தனர். உடனே போலீசாரை இஷ்டத்துக்கு வசை பாட ஆரம்பித்தார் நாகராஜ்.
ஒரு கட்டத்தில் சட்டையை கழற்றி ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என்று சண்டைக்கு வருமாறு சவால் விட்டு அலப்பறை செய்தார்.

போலீசார் அவரை பலமுறை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முயன்ற நிலையிலும் அடங்காமல் போலீசாரை கடுமையாக விமர்சித்த அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

அவரது எகத்தாள குரல் ஏகத்துக்கு எகிறியதால் போலீசார் அவரை மடக்கிப்பிடிக்க முயன்றனர். போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது வழுக்கி விழுந்ததால் எதிர்பாராதவிதமாக இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார் அவருக்கு மனித நேயத்துடன் மாவுகட்டுப்போட்டு விட்டதாக தெரிவித்தனர். கால்மேல் கால் போட்ட கட்டராஜா, தற்போது நடக்க இயலாமல் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக உள்ளார்.

இதே போல கடலூர் அருகே சாவடியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரின் சோதனையில் ஆட்டோவில் சாராய பாக்கெட் வைத்திருந்தவரிடம் இருந்து சாராயப்பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர். போதையில் இருந்த அவர், தான் கொண்டு சாராய பாக்கெட்டுகளை வரவே இல்லை.. என்ன ஆதாரம் இருக்கிறது.. நீ எல்லாம் ஒரு போலீசா? என ரகளை செய்தார்.

போலீசார் கைப்பற்றி வைத்திருந்த செல்போனை எடுத்துக் கொண்டு போலீசாரை கடுமையாக விமர்சித்தார்.இதையடுத்து போலீசார் , அவரிடம் கைப்பற்றிய சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்தனர். மற்றொரு போதை ஆசாமி தன்னிடம் பறிக்கப்பட்ட சாராய பாக்கட்டை கேட்டு போலீசாரிடம் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தரங்கரையில் ஏடிஎம் காவலாளியிடம் ரூபாய் நோட்டு கிழிந்திருப்பதக கூறி தகராறில் ஈடுபட்ட இரு போதை ஆசாமிகளின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்த நிலையில் , செல்போனை தராவிட்டால் சாலையில் வரும் வாகனங்களின் கண்ணாடியை உடைத்து விடுவேன் என போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments