உதகை தாவரவியல் பூங்காவில் 80 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்ட 45 அடி உயர மயில்
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை விழாவையொட்டி 125வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 80 ஆயிரம் கார்னேஷன் மலர்களை கொண்டு சுமார் 45 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள தோகை விரித்த மயில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
35 ஆயிரம் மலர் தொட்டிகளில் பலவகையான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளையும், சிறுவர் சிறுமியர்களையும் கவரும் வகையில் புலி, சிறுத்தை, வரையாடு, டால்பின் போன்ற வடிவமைப்புகள் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சி 23ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments