500 கி. மீ தூரத்தை ஆறரை மணி நேரத்தில் கடக்கும்.. ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர்..!
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை இணைக்கும் இந்த வந்தே பாரத் ரயில், 500 கிலோ மீட்டர் தூரத்தை ஆறரை மணி நேரத்தில் கடக்கும். காணொளி மூலம் பிரதமர் பச்சைக் கொடியை அசைத்ததும் வந்தே பாரத் ரயில் பூரி- ஹவுரா இடையே பயணத்தைத் துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் புதிய ரயில்வே பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர் முடிக்கப்பட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவற்றின் மதிப்பு 8 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். பின்னர் பேசிய பிரதமர், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறைகளில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதாகக் கூறினார்.
வந்தே பாரத் ரயில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பயணிக்கும்போது அது இந்தியாவின் வேகத்தையும் வளர்ச்சியையும் பிரதிபலிப்பதாக தெரிவித்த பிரதமர், இந்தியாவின் ஒருமைப்பாடு எந்த அளவுக்கு வலுப்பெறுகிறதோ, அந்த அளவுக்கு அதன் கூட்டுத் திறன் அதிகரிக்கும் என்றார்.
Comments