செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பை கண்டு கடையிலிருந்தவர் ஓட்டம்..! திடுக்கிட வைக்கும் காட்சி..!
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குள் உள்ள செல்போன் கடைக்குள் சுதந்திரமாக சுற்றித்திரிந்த பாம்பு ஒன்று, கடையில் இருந்தவரின் கால் மீது ஏறியதால் அவர் அலறியடித்துக் கொண்டு ஓடினார்.
செல்போன் கடை ஒன்றில் மெய்மறந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்தவரை பாம்பு ஒன்று ஓடவிட்ட காட்சிகள் தான் இவை..!
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலைய வளாகத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் விஜய் பிரசாந்த் . சம்பவத்தன்று மாலை 5 மணி அளவில் அவரது நண்பர் வெங்கடேஷ் கடைக்குள் அமர்ந்து தனது செல்போனை மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அவரது இடது கை பக்கம் உள்ள கண்ணாடி அலமாரியில் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்தது
அலமாரியில் இருந்து மெல்ல இறங்கிய அந்த பாம்பு வெங்கடேசனின் கால்களில் ஏறியதால் உஷாரான அவர் கடையில் இருந்து அலறிக்கொண்டே வெளியே ஓடினார்
அதற்குள்ளாக அந்த பாம்பு அவரை கண்டு பயந்து அருகில் இருந்து இடைவெளிக்குள் புகுந்து மறைந்து கொண்டது
கடையின் உரிமையாளர் விஜய் பிரசாந்த் , பாம்பு பிடிக்கும் நபரான விக்னேஷ் என்பவரை வரவழைத்து கடைக்குள் பதுங்கிய பாம்பை தேடினர். அப்போது சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஷீட்டை கிழித்ததும் அதனுள் இருந்த பாம்பு அங்கிருந்து தப்பி வேறு ஒரு பகுதிக்கு சென்று மறைந்தது
கடையையே புரட்டிபோட காரணமாயிருந்த பாம்பு சாமர்த்தியமாக தப்பிச்சென்ற நிலையில் இன்னைக்கு வியாபரம் போதும் என்று உரிமையாளர் தனது செல்போன் கடையை இழுத்துப்பூட்டிவிட்டுச்சென்றார்.
Comments