''முதலமைச்சர் பதவி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்'' - டி.கே.சிவகுமார்

0 2365

முதலமைச்சர் பதவி தொடர்பான வதந்திகளை, யூகங்களையும் நம்ப வேண்டாம் என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் யார் என்பதில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், அதற்கான போட்டியில் உள்ள சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் இன்று காலை ராகுல் காந்தியுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் பதவியுடன் 6 முக்கிய அமைச்சர் பொறுப்புகள் அல்லது, இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என இரு வாய்ப்புகள் டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், முதலமைச்சர் பதவியை பிடிப்பதில் அவர் தீவிரமாக இருப்பதால் அறிவிப்பு வெளியிடுவதில் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது. 

இதனிடையே, இன்னும் 3 நாட்களுக்குள் கர்நாடக அமைச்சரவை பதவியேற்கும் என  காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments