அனுமதியின்றி கேரளாவிற்கு பால் அனுப்புவதை கண்காணிக்கிறது அரசு - பால்வளத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ்
தமிழகத்தில் இருந்து முறையான அனுமதி இல்லாமல் கேரளாவிற்கு பால் ஏற்றுமதி செய்து வரும் தனியார் பால் சங்கங்களை கண்காணித்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ் கூறினார்.
சேலத்திலுள்ள ஆவின் பால்பண்ணையில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், விவசாயிகளை நம்பியே ஆவின் நிர்வாகம் உள்ளது என்பதால், பால் உற்பத்தியை பெருக்க வங்கிக் கடனுதவி மூலம் இரண்டு லட்சம் கறவை மாடுகள் கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் உரிய நேரத்தில் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதற்கான பணியில் ஆவின் ஈடுபட்டு வருவதாகவும் மனோ. தங்கராஜ் கூறினார்.
Comments