நுங்கு தராத வியாபாரியை அரிவாளால் வெட்டிய இளைஞர் எதிரே வந்த பேருந்து மோதி உயிரிழப்பு

0 3394

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நுங்கு கேட்டு தராத வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு ஓடிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார்.

வடக்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி, சிதம்பரம் நகரில் பனை நுங்கு வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேஷ் என்ற மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் இலவசமாக நுங்கு கேட்டதாக தெரிகிறது.

அதற்கு கோபால்சாமி மறுத்ததால் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டி விட்டு ராஜேஷ் ஓடினார். அப்போது எதிர்திசையில் வந்த தனியார் பேருந்து ராஜேஷ் மீது மோதியது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments