கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - முதல்வர்
தொழிற்சாலைகளில் எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணித்து, அவை விஷச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் தலைமையில், காவல் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை தொடர்ந்து விற்பவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்பாட்டில் உள்ளதை, மக்களிடையே பிரபலப்படுத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
ஒவ்வொரு மாவட்டத்தின் உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கத்துறையின் whatsapp எண்களை அறிவித்து, அதில் பெறும் புகார்களை மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
Comments