கர்நாடக முதலமைச்சராகிறார் சித்தராமையா..? துணை முதலமைச்சராகும் டி.கே.சிவகுமார்..?
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அறுதிபெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றிப்பெற்றும், முதலமைச்சர் யார் என்பதில் இன்னும் முடிவுகள் எட்டப்படாத நிலை நீடிக்கிறது.
இதனிடையே, டெல்லியில் ராகுல் காந்தியுடன், சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், முதலமைச்சர் பதவி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிவக்குமாரை சமாதானப்படுத்த துணை முதலமைச்சர் பதவியுடன், மின்சாரம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பொறுப்புகளும் வழங்க காங்கிரஸ் முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல், முதல் 2 ஆண்டுகள் சித்தராமையாவுக்கும், எஞ்சிய 3 ஆண்டுகளை சிவகுமாருக்கும் முதலமைச்சர் பதவியை பிரித்து வழங்கும் திட்டம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்றைக்குள் முதலமைச்சர் பதவி தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக கூறப்படும் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் முன்னேற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments