பிளாஸ்டிக் வளையம் கழுத்தில் சிக்கி காயமடைந்த கடல் சிங்கத்தை மீட்டு சிகிச்சை அளித்த உயிரியலாளர்கள்!

0 1474

அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் வளையம் கழுத்தில் சிக்கி காயமடைந்த கடல் சிங்கத்தை உயிரியலாளர்கள் மீட்டனர்.

அகுவாஸ் வெர்டெஸ் கடற்பகுதியில் கடல் சிங்கம் ஒன்று கழுத்தில் காயத்துடன் இருப்பதாக கிடைத்த தகவலின் படி, Mundo Marino என்ற அமைப்பினர் அதனை பிடித்தனர்.

தொழிற்சாலைகளில் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேண்ட் கடல் சிங்கத்தின் கழுத்தில் சிக்கியது தெரியவந்ததை அடுத்து, அதனை பாதுகாப்பாக அகற்றி காயத்திற்கு சிகிச்சை அளித்தனர்.

கடல் சிங்கம் முழுமையாக குணமடைந்ததும் கடலில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments