இராணுவ செயற்கைக்கோள் நிலையத்தில் மகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் சென்று இராணுவ செயற்கைக்கோள் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
செயற்கைக்கோள் நிலையத்தை பார்வையிட்ட பின், அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த கடந்த மாதம் கிம் உத்தரவு பிறப்பித்தார்.
உளவு செயற்கைக்கோள் எப்போது ஏவப்படும் என்ற எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், வடகொரிய அதிபரின் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Comments