தள்ளு.. தள்ளு.. தள்ளு..! போகுதே மானம் போகுதே..! தள்ள.. முடியலண்ணே..! இவனுங்க முன்னாடியா அவமானப்படனும்..!

0 4644

 நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த பாரதீய ஜனதா கட்சியினரை கைது செய்து அழைத்துச்சென்ற பேருந்து பழுதாகி நடுவழியில்  நின்றதால் , பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கீழே இறங்கி அந்த பேருந்தை தள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனை , ஒரத்தூருக்கு இடம் மாற்றுவதை கண்டித்து பாஜகவினர் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் பாஜகவினரை அரசு பேருந்தில் ஏற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். அருகில் தனியார் திருமண மண்டபங்கள் ஏதும் கிடைக்காத காரணத்தினால் மூன்று முறை புதிய பேருந்து நிலையத்திற்கும், பழைய பேருந்து நிலையத்திற்கும் அரசு பேருந்து சுற்றி சுற்றி வந்தது.

வேறு ஒரு பகுதியில் காலியாக இருக்கும் தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் திடீரென அரசு பேருந்து நடு வழியில் பழுதாகி நின்றது. ஸ்டார்ட் செய்த போது செல்ப் எடுக்காமல் பேருந்து தினறியது. இதையடுத்து பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் பேருந்தை இறங்கி தள்ளினார்.

பேருந்தில் இருந்த பாரதீய ஜனதா கட்சியினரை இறங்க விடாமல் போலீசார் தடுத்து பிடித்துக் கொண்டனர். இதனால் அவர்கள் பேருந்தில் இருந்தவாரே தள்ளு , தள்ளு, தள்ளு என போலீசாரை வடிவேல் பட டயாலாக் சொல்லி நக்கலடித்தனர்.

கூடுதல் போலீசாரை வரவழைத்து, அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச்சென்று பாஜகவினரை அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments