சொகுசு காரில் ஏறி மெரினா போறீங்களா..? இதை மட்டும் செய்யாதீங்க...! உஷார்... போலி பார்க்கிங் ஊழியர்கள்...

0 4129

சென்னை மெரினா கடற்கரையில் காரை பார்க்கிங் செய்யும் மாநகராட்சி ஊழியர் எனக் கூறி, யாராவது காரின் சாவியை கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து வந்த ஆசிரியரை ஒருவர் அப்படி கொடுத்துவிட்டு தனது  இன்னோவா காரை பறிகொடுத்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உறவினர்களுடன் மெரீனா கடற்கறைக்கு வந்து செல்லும் நிலையில் தான், கன்னியாகுமரி ஆசிரியையிடம் மோசடியாக கார் களவாடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்த ஆசிரியை சுமித்ரா தங்கஜோதி, சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது காரில் வந்துள்ளார்.

மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க தனது காரில் உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

சுமித்ரா காரை நிறுத்துவதற்காக இடம் தேடுவதை வைத்து அவர் வெளியூர்காரர் என்பதை தெரிந்து கொண்ட ஆசாமி ஒருவன் தன்னை மாநகராட்சியில் பணிபுரியும் பார்க்கிங் ஊழியர் என கூறி அறிமுகமாகி இருக்கிறான்.

காரை சரியான இடத்தில் பார்கிங் செய்து தருவதாக கூறி கார் சாவியை கேட்டுள்ளான். இதனை நம்பி சாவியை கொடுத்து விட்டு சென்ற ஆசிரியை திரும்ப வந்து பார்த்தபோது காரையும் காணவில்லை, கார் பார்க்கிங் ஊழியர் என்று கையில் சாவியை வாங்கியவரையும் காணவில்லை.

தனது கார் களவாடப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியை சுமித்ரா, இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கார் திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நூதன கார் திருட்டு சம்பவம் தொடர்பாக உஷாராக இருக்குமாரு எச்சரித்துள்ள போலீசார், மெரீனா கடற்கரைக்கு வரும் மக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் , நல்ல தரமான பூட்டு கொண்டு பூட்டிச்செல்ல வேண்டும் என்றும் கார்களை எடுத்து விடுவதற்கு என்று மாநகராட்சி எந்த ஒரு பார்க்கிங் ஊழியரையும் பணிக்கு அமர்த்தவில்லை என்றும் அது போல யாராவது சாவிகளை கேட்டால் கொடுக்க வேண்டாம் உஷாருடன் நடந்து கொள்ள போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments