மாணவர்களின் சான்றிதழ்களை பிடித்து வைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லை-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மாணவர்களின் சான்றிதழ்களை பிடித்து வைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எந்த உரிமையும் இல்லையென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு வழங்கியுள்ளது.
படிப்பை பாதியில் நிறுத்திய தனது சான்றிதழ்களை வழங்குவதற்கு 2 லட்சம் ரூபாய் கேட்ட வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரிக்கு எதிராக ஆர்ஷியா பாத்திமா என்ற மாணவி வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அதை விசாரித்த நீதிபதி, சான்றிதழ்களை வைத்துக்கொள்ள கல்லூரிகள் கடன் வழங்குவோர் அல்ல என்று தெரிவித்ததோடு, மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க சட்ட அடிப்படையில் ஏராளமான வழிகள் உள்ளதால், மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.
Comments