எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட தயார்.. திருமாவளவன் சொல்கிறார்..!
மதுவுக்கு எதிராக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால் ,அவருடன் இணைந்து குரல் கொடுக்க தயாராக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்...
கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறிய விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
டாஸ்மாக் என்ற அரசு அனுமதி பெற்று இயங்கிக் கொண்டிருக்கிற மதுக் கடைகள் இருக்கும்போதே, கள்ளச்சாராயம் இந்த அளவுக்கு விற்கப்படுகிறது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது அதுவும், குடியிருப்புகளுக்கு அருகே சென்று விநியோகம் செய்யக்கூடிய நிலை இருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்து நடைபெற்றிருக்கிறது என்று கூறினார்..
அரசு மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தாத வரை கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முடியாது என்ற திருமாவளவன் அரசே மது வணிகத்தை அனுமதித்து நடத்துவது ஏற்புடையது அல்ல. கள்ளச் சாராய விற்பனை குறித்து அரசு கண்டும் காணாமல் இருப்பது, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டும் என்ற திருமாவளவன், மதுவுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால் அவருடன் இணைந்து குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என்று திருமாவளவன் தெரிவித்தார்..
Comments