கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசே பொறுப்பு.. சமூகப்போராளிகள் எங்கே போனார்கள்? - இபிஎஸ் கேள்வி
அரசுக்கு தெரிந்தே தமிழ்நாட்டில் தடையின்றி கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிப்படைந்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை விவரங்களை கேட்டறிந்த அவர், அ.தி.மு.க சார்பில் உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் பேட்டியளித்த அவர், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், தற்போதைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படாததால் துயர நிகழ்வுகள் நடந்ததாகவும் கூறினார்.
மேலும், சமூகப்போராளிகள் என கூறிக்கொண்டு முந்தைய ஆட்சியில் மதுவை எதிர்த்தவர்கள் தற்போது எங்கே போனார்கள்? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments