கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்.? தொடர்ந்து நீடிக்கும் இழுபறிக்கிடையே டி.கே.சிவக்குமாரும் டெல்லி பயணம்

0 1761

கர்நாடகத்தில் புதிய முதலமைச்சர் யார் என்பதில் கடும் இழுபறி நீடிக்கும் நிலையில் தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். முதலமைச்சர் யார் என்பதை 24 மணி நேரத்தில் அறிவிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா டெல்லி சென்று கட்சித் தலைவர் கார்கேவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, முதலமைச்சர் யார் என்று கட்சித் தலைமை முடிவெடுக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார்.

இதனிடையே, நேற்று டெல்லிக்கு செல்வதாக இருந்த டி.கே.சிவக்குமார் கடைசி நேரத்தில் தமது பயணத்தை ஒத்திவைத்தார். உடல் நலம் சரியில்லை என்றும், இன்று டெல்லி செல்லவிருப்பதகவும் அவர் கூறினார். முன்னதாக டி.கே.சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments