உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய 'ஸ்டார்ம் ஷேடோ' ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா பெருமிதம்..!
உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய Storm Shadow என்ற அதிநவீன ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு அஞ்சி, தொலை தூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மேற்கத்திய நாடுகள் தயக்கம் காட்டிவந்தன.
இந்நிலையில், 500 கிலோமீட்டர் அப்பால் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் Storm Shadow ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்கியதாக இங்கிலாந்து வெளிப்படையாக அறிவித்தது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ்க் நகர தொழிற்சாலைகள் மீது அந்த ஏவுகணைகளை செலுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்திவந்த நிலையில், முதல்முறை அந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
Comments