இந்து மகா சபா இளைஞரணி தலைவர் சுபாஷ் வீட்டு காவலாளி மீது சரமாரி தாக்குதல்..!
கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடையில், அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் வீட்டு காவலாளி தாக்கப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்னிமடை ஆண்டாள் அவென்யூவில் உள்ள சுபாஷ் வீட்டிற்கு வந்த 13 பேர் கொண்ட கும்பல், 68 வயதான காவலாளி கதிர்வேலை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியது.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தடாகம் போலீசார், கதிர்வேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுபாஷை தாக்க முயன்றது, அவரது வளர்ப்பு நாயை விஷம் வைத்து கொன்றது, சுபாஷுக்கு சொந்தமான 2 கார்களை தீ வைத்து எரித்தது போன்ற பல வழக்குகள் தடாகம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments