அதானி குழுமம் மீதான ஆய்வறிக்கையை தாக்கல் செய்த செபி..!

0 2019

2016 ஆம் ஆண்டு முதல் அதானி குழுமத்தில் நடைபெற்ற பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் செபி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் எழுப்பிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி வரும் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும்,  உலகளாவிய வைப்புத்தொகை ரசீது (Depository Receipts) வழங்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்ட 51 நிறுவனங்களில், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனமும் இடம்பெறவில்லையெனவும் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் முன்கூட்டிய மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க வேண்டாமெனவும் செபி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments