மே 18 ஆம் தேதி கர்நாடகாவில் காங்கிரஸ் பதவியேற்பு விழா... யார் முதலமைச்சர்..?
கர்நாடகாவில் வரும் 18 ஆம் தேதி காங்கிரஸ் முதலமைச்சர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் முதலமைச்சர் யாரென அறிவிக்கப்படவில்லை.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிப் பெற்ற நிலையில் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா மற்றும் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர்கள் 3 பேரை சிறப்பு பார்வையாளர்களாக கட்சி நியமித்ததைத் தொடர்ந்து அவர்களது மேற்பார்வையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.
இதில், முதலமைச்சரை தேர்வு செய்யும் உரிமையை கட்சியின் தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Comments