ரேடாரில் சிக்காமல், நீரில் மூழ்கியபடி பயணிக்கும் 'நார்கோ-சப்மரைனில்' கடத்தப்பட்ட 3 டன் கொக்கைன் சிக்கியது

0 3564
ரேடாரில் சிக்காமல், நீரில் மூழ்கியபடி பயணிக்கும் 'நார்கோ-சப்மரைனில்' கடத்தப்பட்ட 3 டன் கொக்கைன் சிக்கியது

வெளியே தெரியாத வண்ணம், நீரில் மூழ்கியபடி பயணிக்கும் நார்கோ-சப்மரைனில் கடத்தப்பட்ட 3,000 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கொலம்பியா கடற்படையினர் கைப்பற்றினர்.

ரேடார், சோனார் போன்ற கருவிகளில் சிக்காமலிருக்க நீரின் மேல்மட்டத்தில் மூழ்கியபடி பயணிக்கும் நார்கோ-சப்மரைன் கப்பலை கடத்தல் கும்பல் அதிகம் பயன்படுத்திவருகின்றனர்.

இவ்வகை கப்பல்களை கட்டமைப்பவர்களுக்கும், பயன்படுத்துவோருக்கும் கொலம்பியாவில் 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், பசிபிக் பெருங்கடல் வழியாக சென்ற 100 அடி நீள நார்கோ-சப்மரைனை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்டபோது 3,000 கிலோ கொக்கைன் சிக்கியது. கப்பலில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments