டிக் டாக் மிகவும் ஆபத்தான சமூக ஊடக செயலி என எலான் மஸ்க் குற்றச்சாட்டு..!
டிக் டாக் செயலி சில குறிப்பிட்ட இளம் வயதினரிடையே மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க் டிக் டாக் வீடியோக்களால் இளம் வயதினர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தம்மால் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்கள் 13 வயது சிறுவனின் பெயரில் போலியான கணக்கைத் தொடங்கியதும் உடல் தோற்ற கேலிகள், உணவுக் கோளாறுகள், உளவியல் பாதிப்பு மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற வீடியோ கிளிப்புகள் பதிவேற்றப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்
Comments