அன்பின் ஆலயமான அன்னை.. தாயாரை போற்றும் அன்னையர் தினம்.. தாய்மையை போற்றுவோம்!
உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னலமற்ற தாயின் அன்பை விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்..
அம்மா என்றால் அன்பு. தாயின் வயிற்றில் இருந்து வந்து உலகைக் காண்பதே பிள்ளையின் முதல் காட்சி. அம்மா என்பதுதான் குழந்தையின் முதல் வார்த்தை. அம்மா என்பது அளவற்ற கருணைக் கடல், அம்மா என்றால் பிள்ளைகள் அனைவருக்கும் பேரானந்தம்.
தந்தையை அறிவின் பெட்டகமாகவும் தாயை அன்பின் ஆலயமாகவும் காண்பது நமது மரபு ,தந்தையின் பாசம் குடத்திலிட்ட விளக்கு என்றும் தாயின் பாசம் தட்டில் வைத்த தீபம் என்றும் பாடினார் கவிஞர் கண்ணதாசன்.
அன்னையின் சொல் கேட்டு நடப்பவர்கள் வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரமே இல்லை. மற்றவர்களுக்காக வாழும் மனம் அன்னையின் மனம்தான் என்பதை பிள்ளைகள் அறிவார்கள்.
மகனும மகளும் வளர்ந்து ஆளாவதைக் கண்டு கண்குளிரும் அன்னைக்கு தனது கனவுகள் நனவாகும் காலம் கனிகிறது.
உலகில் எல்லா இடங்களிலும் இருப்பதற்காகத்தான் இறைவன் தாயைப் படைத்தான் என்பார்கள். தாயையும் தந்தையையும் வயதான காலத்தில் காக்க மறுப்பவர்கள் எல்லோரும் தங்கள் பிள்ளைகளால் தாங்களும் நிராகரிக்கப்படுவார்கள் என்பதை உணர வேண்டும்.
எனவே எப்போதும் தாய்மையைக் கொண்டாடுவோம். வணங்குவோம்...
Comments