"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே சண்டை நிறுத்தம் அறிவிப்பு!
கடந்த 5 நாட்களாக நீடித்த கடும் யுத்தத்தினிடையே நேற்று இரவு 10 மணி முதல் பாலஸ்தீன ஜிகாத் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சமரச முயற்சியில் ஈடுபட்ட எகிப்து அரசு இருதரப்பும் வன்முறை யுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சண்டையில் பொது மக்கள் 13 பேர் உள்ளிட்ட 33 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். ராக்கெட் குண்டு வீச்சு மூலம் இஸ்ரேலில் 2 பேர் உயிரிழந்தனர்.
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதும் ராக்கெட் சைரன் ஒலி இரவில் கேட்டுக் கொண்டே இருப்பதாக இஸ்ரேல் மக்கள் தெரிவித்தனர்.இதனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் காசாவில் பூமிக்கடியில் உள்ள இரண்டு ராக்கெட் லாஞ்சர் மீது அதிரடியாக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
Comments