கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.. 136 தொகுதிகளை கைப்பற்றி சாதனை..

0 28241

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னிலை நிலவரம்

 
  பாஜக      காங்கிரஸ்         ம.ஜ.த                மற்றவை
65 136 19 04
     

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றிப்பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. காலை நடைபெற உள்ள அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 10ஆம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள், 36 மையங்களில் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற காங்கிரஸ் கட்சி மொத்தம் 136 இடங்களை கைப்பற்றியது. பாஜக 65 இடங்களையும், ம.ஜ.த. 19 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன. தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் ஞாயிறு காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், அதன் பின் ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்க கமல்நாத் உள்ளிட்ட 2 மூத்த தலைவர்களை மேலிட பார்வையாளர்களாக காங்கிரஸ் தலைமை அனுப்பி வைத்துள்ளது.

வெற்றி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார், வாக்களித்த மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா பேசிய போது, கர்நாடகாவில் ஒரே மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ் மட்டுமே என்றார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments