ரூ.24,000 கோடி லாபம் ஈட்டியது 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்'.. 50,000 ஊழியர்களுக்கு 24 வார சம்பளம் போனஸ்..!

0 2563

கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த நிதியாண்டில் நான்கரை கோடி பேர் பயணித்துள்ளனர்.

இதனால், இதுவரை இல்லாத அளவிற்கு அந்நிறுவனம் 29 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. வரலாறு காணாத உச்சத்தை கொண்டாடும் விதமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஐந்தரை மாத சம்பளத்தை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் போனஸாக வழங்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments