மைக்ரோஃபோனை அனுமதியின்றி பயன்படுத்துகிறதா வாட்ஸ்ஆப்..?

0 4524

தனது மைக்ரோபோன் அனுமதியின்றி இயங்கியதற்கு ஆண்டிராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

வாட்ஸ் ஆப் செயலி தனது போனின் மைக்ரோபோனை அனுமதியின்றி இயக்குவதாகவும், தான் உறங்க செல்லும்போது கூட பின்னணியில் மைக் இயங்கியதாகவும் பொறியாளர் ஒருவர் டிவிட்டர் தளத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அது ஏற்றுக்கொள்ளமுடியாத தனியுரிமை மீறல் என்றும், அது பற்றி  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மைக்ரோபோன் விவகாரம் குறித்து புகார் தெரிவித்த பொறியாளரை தொடர்பு கொண்ட வாட்ஸ்ஆப் நிறுவனம், ஆண்டிராய்ட் இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளே அந்த பொறியாளரின் ஃபோனில் மைக் தானாக இயங்கியதற்கு காரணம் என கூறியுள்ளது.

பிரச்சனையை சரி செய்யுமாறு கூகுள் நிறுவனத்தை வாட்ஸ் அப் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments