பெட்ரோல் நிலைய உரிமையாளரிடம் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையனை சுட்டுப் பிடித்த போலீசார்
பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் அர்ராஹ் எனுமிடத்தில் பெட்ரோல் நிலைய உரிமையாளர் வங்கியில் பணம் செலுத்த வந்த போது அவரை 3 பேர் துப்பாக்கிமுனையில் மிரட்டி, 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துத் தப்பிச் செல்ல முயன்றனர்.
பெட்ரோல் நிலைய உரிமையாளரும் போலீசாரும் விரட்டிய போது அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் கொள்ளையன் ஒருவரும் காயம் அடைந்தனர். தப்பிச் சென்ற கொள்ளையர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments