மணிப்பூரில் குக்கி தீவிரவாதிகள் தாக்கியதில் காவல்துறை கமாண்டோ உயிரிழப்பு

0 1682
மணிப்பூரில் குக்கி தீவிரவாதிகள் தாக்கியதில் காவல்துறை கமாண்டோ உயிரிழப்பு

மணிப்பூரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கமாண்டோ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 காவலர்கள் படுகாயமடைந்தனர்.

பிஷ்னுபூர் மாவட்டத்தில் ட்ரோங்லாபி என்ற இடத்தில் ரோந்து சென்ற காவல்துறையினர் மீது குக்கி தீவிரவாதிகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறையைச் சேர்ந்த கமாண்டோ ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 காவலர்கள் படுகாயடைந்தனர்.

இந்தத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் மீது குக்கி அமைப்பினர் தாக்கியதில் வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இதனிடையே, சலவரத்தின்போது காவல்துறையினரிடம் கொள்ளையடிக்கப்பட்ட 284 ஆயுதங்களும், 6 ஆயிரத்து 700 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments