ஐபிஎல் டிக்கெட்டுக்காக குழந்தைகளை பரிதவிக்க விட்ட தாய்... மைக் மூலம் அழைத்து குழந்தைகளை ஒப்படைத்த போலீசார்

0 2532
ஐபிஎல் டிக்கெட்டுக்காக குழந்தைகளை பரிதவிக்க விட்ட தாய்... மைக் மூலம் அழைத்து குழந்தைகளை ஒப்படைத்த போலீசார்

சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க, பெற்ற குழந்தைகளை பரிதவிக்க விட்டு தாய் டிக்கெட் வாங்க சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளைமறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதை முன்னிட்டு இதற்கான டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது.

ஆனால் நள்ளிரவு முதலாகவே ஏராளமானோர் டிக்கெட் வாங்குவதற்காக டிக்கெட் கவுண்டர் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் பெண் ஒருவர் டிக்கெட் வாங்குவதற்காக தன் இரு குழந்தைகளை அங்கிருந்த மூதாட்டியிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாக அவர் வராததால் மூதாட்டியிடம் இருந்த பச்சிளம் குழந்தை அழ ஆரம்பித்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் ஒலிபெருக்கி மூலம் தாயை வரவழைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments