பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிள் கண்டுபிடிப்பு... 150கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுமாம்

0 2726
பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிள் கண்டுபிடிப்பு... 150கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுமாம்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பீரால் இயங்கும் மோட்டார்சைக்கிளை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிளில் எரிவாயு இயங்கும் இயந்திரத்திற்கு பதிலாக 14காலன் எடை கொண்ட வெப்பம் ஊட்டும் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பீரை ஊற்றும் போது 300டிகிரி வரை சூடாக்குகிறது.

பின்னர் அது பைக்கை முன்னோக்கி செலுத்துவதற்கு ஏதுவாக அதிக வெப்பமான நீராவியாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 150கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்று கூறிய கண்டுபிடிப்பாளர் மைக்கேல்சன் தொடர்ந்து உயர்ந்து வரும் எரிவாயுவின் விலைக்கு மாற்றாக இதனை உருவாக்கினேன் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments