ஜப்பானில் மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு விருது

0 2669
ஜப்பானில் மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு விருது

ஜப்பானில், மாரடைப்பால் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சிபா நகரில் உள்ள வகாபா-குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 50 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பால் நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அருகில் இருந்த ஐந்தே வயதான Koume என்ற நாய் சாதுர்யமாக செயல்பட்டு இடைவிடாமல் குரைத்துள்ளது.

நீண்ட நேரமாக நாய் குரைத்துக் கொண்டே இருந்ததால், அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments