இம்ரான் கானை நீதிமன்றத்தில் கைது செய்தது சட்டவிரோதம் - பாக்.உச்சநீதிமன்றம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என்றும், உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்த அவரை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து துணைராணுவப் படையினர் கைது செய்தனர். இதனை எதிர்த்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இம்ரான்கான் மேல்முறையீடு செய்தார்.
தான் நீதிமன்றத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்டதாகவும், கம்புகளால் தாக்கப்பட்டதாகவும் இம்ரான் அப்போது தெரிவித்தார். இதையடுத்து, இம்ரான்கானை உடனடியாக விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments