இத்தாலியின் மிலன் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்து.. சாலையில் நிறுத்தப்பட்ட பல கார்கள் தீயில் எரிந்து சேதம்..!

0 1687

இத்தாலியின் மிலன் நகரில் கார் நிறுத்தம் ஒன்றில் நேரிட்ட வெடிவிபத்தால் கார்கள் வரிசையாக தீப்பிடித்து எரிந்தன. மிலன் நகரின் மத்திய பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் எதிர்பாராதவிதமாக வெடித்தது.

அதில் இருந்து பற்றிய தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் பரவி மளமளவென எரிந்தன.

பற்றி எரிந்த கார்களில் இருந்து எழுந்த கரும்புகை பெரும் உயரத்திற்கு எழுந்தது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்காக காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments